தமிழ் இந்துவில் இரா. வினோத்'தின் கட்டுரையை ஒட்டி திமுக அனுதாபிகளின்/உடன்பிறப்புகளின் எதிர்வினை அவர்களின் பதற்றத்தை தலித்துகளின் காவலன்/பிரதிநிதி தாங்கள் மட்டுமே எனும் அவர்கள் கட்டிய பொய் பிம்பம் உடைந்திருப்பதின் உண்மை அது அவர்களுக்கு அளிக்கும் அசௌகரியம் மற்றும் கேள்விக்குள்ளாகி இருப்பதன் எரிச்சல் நன்றாக தெரிகிறது.
அடேயப்பா, என்ன மாதிரியான வாத பிரதிவாதங்கள் / சால்ஜாப்புகள்...ம்ம்.
இந்த கட்டுரையை வைத்து திமுக ஆதரவாளர்களிடம் ஏன் இந்த புலம்பல்/அழுகை/களேபரம்/கரிசனம்...இது வலையில் சிக்கிய பறவை பறந்து போவதை கண்ட வேட்டைக்காரன் ஓலம், அவ்வளவே...
//ஒத்த ராசாவை வச்சிகிட்டு உபி'ஸ் அடிக்கிற கும்மி இருக்கே ஆத்தாடி...தலித்திய, ஒடுக்கப்பட' னு அவரும் எவ்வளவுதான் தாங்குவாரு.சென்ட்ரலிலும் அவரெ, MP அவரெ'னு ஒரெ மயிர் கூச்செரியும் வாதம்.// - இது நண்பன் பிமலின் பதிவு உண்மைதானே.
அய்யா நாங்கள் கேட்பது அவர் (ஆர் ராசா) தன்னை பட்டியல் இனத்தவராக அவர்களில் ஒருவராக என்றேனும் காட்டிகொண்டாரா அல்லது கட்சி அவரை என்றேனும் அப்படி முன்னிறுத்தியதா என்ன.
சமூக நீதியை மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கொண்டதாக காட்டிகொள்கிற திமுக தலித் மக்கள் தொகையின் - சதவீத அடிப்படையில் MP, MLA சரிவிகிதத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ன ? இல்லையெ, எங்கெ எத்தனை மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள் தலித்துகள்.
திமுக தலைமை நிலைய பதவிகளில் எத்தனை பேர் பட்டியலினத்தவர்கள்.
அப்படி அமைச்சர் பதவி அவர்களுக்கு கொடுக்கபட்டாலும்...கொடுக்கப்பட்ட துறைகள் எது எது?
உண்மையில் திமுக'வனரின் (பல மட்டங்களில் பல பத்து வருடங்களாக கட்சியிளுள்ள திராவிடம் பேசும், பெரியாரியம் பேசும்) சாதி சார் கண்ணோட்டதில் / மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா உடன்பிறப்புகளே?
அமைச்சராக இருந்த MP'யாக இருக்கிற அந்த ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த அவரை அவரது சக (உயர் சாதி-பிற்படுத்தப்பட்ட) சக அமைச்சரிகளால்/ கட்சிக்காரர்களால் நடத்தபடும் விதம் தெரியுமா.
இந்த வருடத்திய சுதந்திர தினத்தன்று பெண் பஞ்சாயத்து தலைவர் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டார், ஏன் - ஒடுக்கப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால், யாரால் - திமுக'வினாரால்.இது ஒன்றும் புதிதல்ல சென்ற காலங்களில் நடந்ததெ,இன்றும் மாறவில்லை அவ்வளவுதான்
பாப்பாபட்டி,கீரிப்பட்டி, கண்டதேவி,மெலவளவு படுகொலை போன்றவை நடந்த போது ஆட்சியில் இருந்தது யார்...50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தலித்து மக்களின் வாழ்வியல் நடந்த மாற்றம் என்பது திமுக'வின் வாக்கி வங்கியாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட-ஆதிக்க சாதிகளின் கை ஓங்கியது மட்டும்தான் நிதர்சனமான உண்மை.
திமுகாவை ஒடுக்க்பட்ட மக்கள் புரிந்து கொண்டார்களா?
இன்றைக்கு நிலைமை மாறி கொண்டிருக்கிறதா?
பட்டியலினத்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஒற்றுமையின்மை ஏன்?
இன்று ஓரளவாவது அது நீங்கி இருக்கிறதா இல்லையா, இல்லையெனில் அது ஏன்?
அனைத்து பட்டியல்லின சாதியினரும் ஒரு குடையின் ஏன் திரளவில்லை, அது சாத்தியமா,எப்படி
-தொடரும்-
No comments:
Post a Comment