Wednesday, 16 September 2020

பேக் ஐடியு'ம் இணைய வசவுகளும்

நம்ம தம்பி ஒருத்தன் லிபரெல்'னு சொல்லிகிறவன் கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவன்தான் ஆனா ரொம்ப நக்கல், நையாண்டி உள்ள ஆளு (நம்ம மாதிரி அப்புராணி கிடையாது) என்ன எந்த எக்ஸ்ட்ரீமும், இஸமும் ஆகாது. அவனுடைய ஆதர்சம் KR Athiyaman Sir. இந்த கம்யூனிசம், கடப்பாரயிசம், திராவிடம், பெரியாரிசம், அண்ணாயிசம், கலைஞரிசம், தமிழ்த்தேசியம், இந்துத்துவம், சனாதனம், சன்னிதானம்'னு பேசுற ஆளுகள சீண்டிற மாதிரி போஸ்ட் போடுறது அந்த ஆளுககிட்டயா போயி ஏதாவது பேசி கமெண்ட்ஸ் போடுறது, சீண்டி, நக்கல் செஞ்சு அவங்ககிட்ட நிறைய வசைகள், கெட்ட வார்த்தைகள் அதாவது அம்மா அம்மம்மா அவங்க அம்மம்மா அக்கா'னு அர்ச்சனையா வாங்கிட்டுடிருந்தான், இப்படி பல வருஷமா... தாங்க முடியமா ஒரு நாள் FB,twitter,Instagram இப்படி எல்லா சோசியல் மீடியா அக்கவுண்ட்டயும் க்ளோஸ் பண்ணிட்டு கொஞ்ச நாள் சும்மா இருந்தவன், இப்ப என்னடானா மேற்படி சொன்ன எல்லா சோசியல் மீடியா Fake ID ஆரம்பிச்சு அதே சீண்டல், அதே கிண்டல்'னு பண்ண இப்ப அதே அம்மா அம்மம்மா அக்கா'னு அதை விட கெட்ட வார்த்தைகள்,வசவுகள்... என்னடா தம்பி இப்ப வருத்தம் இல்லையா, மனசு கஷ்டமா இல்லையா'னு கேட்டா...இல்லீங்கண்ணா அந்த வசவு, கெட்ட வார்த்தை எல்லாம் அந்த Fake ID'க்குதானுங்கணணா எனக்கு இல்லையேங்கறான், என்ன லாஜிக் இது கொழப்பமா இருக்கே.. .

அதாவது அந்த Fake ID அவன்தான அப்ப அந்த திட்டும் அவனுக்குதான, இல்லங்கறானே...என்னடா தம்பி லாஜிக் இது, புரியலியேடா, அண்ணண் பாவம்டா...

No comments:

Post a Comment