Tuesday, 15 September 2020
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை யார்?
என் நண்பன் ஒருவன் அனுப்பியிருந்த வாட்ஸ்அப் பகிர்வில் "Unsung heroes of India"என்ற கட்டுரையை சுட்டி பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை இந்தியா மறந்து விட்டதாக ரொம்பவும் ஆதங்கப்பட்டிருந்தான்
ஆனால் என் முளையில் பதிவாகியிருந்தது இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என சி.சுப்பிரமணியம் அவர்களின் பெயர்.கூகுளை பார்த்தால் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் என்றே நிரம்பியிருக்கிறது.எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை பற்றிய Wiki பக்கமும் பசுமைப் புரட்சியின் தந்தை அவரே என சொல்லி அவரின் பல்வேறு சாதனைகளை விளக்குகிறது.
சி.சுப்பிரமணியம் அவர்கள் 2000'தில் காலமான பொழுது அவரை இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றே குறிப்பிட்டான தி ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா,நியூ ஆர்க் டைம்ஸ் பத்திரிகைகள். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியமும் அவரை பற்றிய தகவல் பகுதியில் அப்படியே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சரான சி.சுப்பிரமணியம் அவர்கள் அன்றிருந்த உணவு பற்றாக்குறை போக்க எண்ணி அதிக மகசூல் தரும் கோதுமை விதைகளை அமெரிக்காவில் இருந்து தருவித்து தன்னுடைய டெல்லி லுட்யன்ஸ் பங்களாவின் தோட்டதில் பயிரிட்டு மற்ற அமைச்சர்களையும் அரசு அதிகாரிகளையும் வரவழைத்து அது இருமடங்கு மகசூல் தருவதை காட்டி விளக்கி அவர்களுக்கு இருந்த தயக்கத்தை போக்கியதை உலக பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் நார்மன் போர்லாக் பெரும் மதிப்புடன் பதிவு செய்கிறார்.
Dr.Norman E. Borlaug, writes: The vision and influence of Mr. Subramaniam in bringing about agricultural change and in the very necessary political decisions needed to make the new approach effective, should never be under-emphasized. The groundwork for this advance (in the production of wheat) was solidly laid during that period (1964–67) when Mr. Subramaniam was the guiding political force instituting change.
ஆர் வெங்கட்ராமன்,வர்கீஸ் குரியன் போன்றோர் அவரை பசுமை புரட்சிக்கும் மட்டுமல்ல வெண்மை புரட்சிக்கும் பெரும் பங்காற்றியவர் என்று குறிப்பிடுகிறார்கள்.
He was green. And white too...
நார்மன் போர்லாக் இந்திய பசுமைப் புரட்சியின் காரணகர்த்தாக்கள் 3S'கள் என்று குறிப்பிடுகிறார். அதாவது சி.சுப்பிரமணியம், எம் எஸ் சுவாமிநாதன் மற்றும் சிவராமன் ICS - விவசாயத்துறை செயலாளர்.
எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களை பற்றிய Wiki பக்கத்தில் சி.ஸ் பற்றியோ, சிவராமன்பற்றியோ எங்குமே ஒப்புக்குக் கூட குறிப்பிடபடவில்லை. ஆனால் சி.சுப்பிரமணியம் அவர்களின் Wiki பக்கத்தில் சுவாமிநாதன் மற்றும் சிவராமன் இருவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.
1) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை யார்?
2) அதெப்படி இருபது வருடத்தில் இந்த மாற்றம்? எந்த தரவுகளின் அடிப்படையில்...
3) அது ஏன் இந்திய பசுமைப் புரட்சி என்றாலே...இணையம் முழுக்க எங்கு காணினும் எம் எஸ் சுவாமிநாதனடா
-தொடரும்-
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment